காலைச் செபம்

எல்லாம் வல்ல இறைவா! என் அன்புத் தந்தையே! கடந்த இரவு முழுவதும் உமது கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். எனது வாழ்வில் மீண்டும் ஒரு புதிய நாளைக் காணச் செய்த கிருபைக்காக உம்மைத் துதிக்கிறேன். இந்த நல்ல வேளை வரைக்கும் தேவரீர் என்னோடு கூட இருப்பதற்காக என்னை முழுமுற்றாக தரைமட்டமாகத் தாழ்த்தி உம்மை ஆராதிக்கின்றேன். எல்லாவற்றிற்கும் மேலாக உம்மீது நான் முழு அன்பு செலுத்துகிறேன். என் எண்ணங்கள், செயல்கள், மற்றும் எனக்குள்ள யாவற்றையும், இப் புதிய நாளையும் உமக்குக் கையளிக்கின்றேன். எனக்கு உமது ஆசியை இன்று அளிக்குமாறு வேண்டுகிறேன். உம்மை நான் என்றும் அறியவும், உம்மீது அன்பு கொள்ளவும், உமக்குப் பணி புரியவும், உம்மோடு விண்ணில் நான் என்றென்றும் இன்புற்றிருக்கவும் உதவி செய்தருளும் - ஆமென்.