செபத்தின் அவசியம்

'கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்' – மத்தேயு 7:7

'ஆண்டவரே! யோவான் தம்சீடருக்கு செபிப்பதற்குக் கற்றுக் கொடுத்ததுபோல எங்களுக்கும் கற்றுக்கொடும்' – லூக்கா 11:1

'மனந்தளராமல் எப்போதும் செபிக்கவேண்டும்' – லூக்கா 18:1

'சோதனைக்கு உட்படாதபடி செபியுங்கள்' – லூக்கா 22:40

'இடைவிடாது செபியுங்கள். என்னநேர்ந்தாலும் நன்றிகூறுங்கள்'- 1தெச5:17

'ஆசைப்படுவதை ஏன் அடைய முடியவில்லை? இறைவனிடம் கேட்காததால்தான். கேட்டாலும் ஏன் அடைவதில்லை? தீய எண்ணத்தோடு கேட்பதாலேயே' – யாகப்பர் 4:3

'உங்களுள் யாரேனும் துன்புற்றால் செபிக்கட்டும். மகிழ்ச்சியாய் இருந்தால் இறை புகழ் பாடட்டும்' – யாகப்பர் 5:13