இரக்கம் நிறைந்த இயேசுவே! நீர் சிலுவை மரத்தில் மூன்று மணி
நேரம் மரண வேதனைப்பட்டு உயிர்துறந்தீர். இதனால் அருள் உயிரின்
ஊற்று உம்மிடமிருந்து பொங்கியெழுந்து உலகில் உள்ள எல்லா
மக்களுக்காகவும் ஆழ்கடலாகப் பெருக்கெடுத்துள்ளது. ஆழங்காணமுடியாத
அளவுக்குத் தெய்வீக இரக்கத்தை வாழ்வின் ஊற்றாகக் கொண்டுள்ள
நீர் முழு உலகையும் உமது இரக்கத்தால் அரவணைத்து எம்மீது
உமது அருள் நீரைப் பொழிந்தருளும்
இறை
இரக்கத்தின் செபமாலை
இரத்தமும் தண்ணீரும் இதயத்திலிருந்து
வழிந்தோட எங்களுணுக்காகச் சிலுவையில் தொங்கும் இரக்கத்தின்
ஊற்றாகிய இயேசுவே! நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்
(மூன்று முறை)
பரலோக மந்திரம்
அருள் நிறைந்த மரியாயே
விசுவாசப் பிரமாணம்
முதல்: நித்திய பிதாவே! எமது
பாவங்களுக்காகவும் உலகின் பாவங்களக்காகவும் பரிகாரம் செய்யும்படியாக...--
அனைவ: உமது நேசக் குமாரனாகிய
எமது ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் உடலையும், இரக்கத்தையும்,
ஆன்மாவையும், தெய்வீகத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
சிறிய கற்களில் (பத்து முறை)
முதல்: இயேசுவின் துன்பகரமான
பாடுகளைப் பார்த்து
அனைவ: எங்கள் மீதும் முழு உலகின் மீதம்
இரக்கமாயிரும்
(மேற்கண்டவாறு தொடர்ந்து ஐந்து தடவைகள் செபிக்கவும்)
முடிவில்; பரிசுத்தரான இறைவனே! பரிசுத்தரும் பலமுள்ளவருமான
இறைவனே! பரிசுத்தரும், பலமுள்ளவரும், எக்காலமும் உள்ளவரான
இறைவனே! அனைத்துலகின் மீதும் எங்கள் மீதும் இரக்கமாயிரும்
(மூன்று முறை)
முடிவுச் செபம்: எக்காலத்துக்கும் தந்தையே!
நீர் அளவிடமுடியாத பரிவும் எல்லையற்ற இரக்கமும் உள்ளவராய்
இருக்கிறீர். எமது துன்ப வேளைகளில் நாம் சோர்வுற்று நம்பிக்கை
இழக்காமல் இருக்க உதவி செய்யும். நாங்கள் உம்மீதுகொண்டுள்ள
எல்லையற்ற நம்பிக்கையால் உமது திருவுளத்திற்கு எங்களை அர்ப்பணித்து
வாழ உமது இரக்கத்தை எங்கள்மேல் பெருகி ஓடச்செய்தருளும் -
ஆமென்.