(பாவசங்கீர்த்தனத்தின்போது
சொல்லவேண்டியசெபம்)
எல்லாம்வல்லஇறைவா!
நீர் அளவில்லாத அனைத்து
நன்மைகளும் நிறைந்தவராக இருப்பதால்
எல்லாவற்றிற்கும் மேலாக
நான் உம்மை முழுமனதோடு அன்பு செய்கிறேன்.
இப்படிப்பட்ட உமக்கு
எதிராகப் பாவங்களைச் செய்ததால்
நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.
எனக்கு இந்த மனத்துயரின்றி வேறு மனத்துயரில்லை.
எனக்கு இந்தத்
துக்கமின்றி வேறு துக்கமில்லை. இனி ஒருபோதும்
இப்படிப்பட்ட
பாவங்களைச் செய்வதில்லையென்று உறுதி செய்கிறேன்.
மேலும், எனக்கு
வலுவில்லாததால் இயேசுகிறிஸ்து பாடுபட்டு
சிந்தின திருஇரத்தத்தால்
என் பாவங்களை எல்லாம் கழுவி, மன்னித்து,
உமது இரக்கத்தையும்,
விண்ணக நிலை வாழ்வையும் தந்தருளுவீர் என்று
முழுமனதோடு நம்புகிறேன்.
திரு அவை நம்பிக்கையோடு கற்றுத்தரும்
உண்மைகளை எல்லாம் நீரே
கற்றுத் தந்தது என நான் உறுதியாக நம்புகிறேன். ஆமென்.
சுருக்கமானமனத்துயர்செபம்:
(பாவசங்கீர்த்தனத்தின்போதுசொல்லவேண்டியசெபம்) என்இறைவனாகிய தந்தையே!
நன்மைகள் நிறைந்தவர் நீர்.
அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே.
என்பாவங்களால் நான் உமது அன்பைப் புறக்கணித்ததற்காகவும்,
நன்மைகள் செய்யத் தவறியதற்காகவும்,
மனம் வருந்துகிறேன்.
உமது அருள் உதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும்,
பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளைவிட்ட விலகுவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.
ஆமென். . |