பாத்திமா அன்னையின் செபம்

ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து இரட்சித்தருளும். சகல ஆன்மாக்களையும் பரலோக பாதையில் வழி நடத்தியருளும். உமது இரக்கம் அதிகமாய் வேண்டியோர்க்கு விசேட உதவி செய்தருளும்.
(ஒவ்வொரு நாளுக்கான மறை உண்மைகளின் அடிப்படையில் செபமாலையைத் தியானித்து அதற்கேற்ப வரங்களை வேண்டி 1பரமண்டல. 10அருள் நிறை. 1 திரித்துவ செபம் சொல்லவும். பொது விதியாக பின்வருமாறு கடைப்பிடிக்கலாம்)
• மகிழ்ச்சி (களிகூர்ந்த) நிறை தேவ இரகசியங்கள் - திங்கள், சனி, மற்றும் திருவருகைக்கால ஞாயிறு
• ஒளியின் தேவ இரகசியங்கள் - வியாழன்
• துயரம் (வியாகுல) நிறை தேவ இரகசியங்கள் - செவ்வாய், வெள்ளி, மற்றும் தவக்கால ஞாயிறு
• மகிமை (மோட்சானந்த) நிறை தேவ இரகசியங்கள் - புதன், மற்றும் பொதுக்கால ஞாயிறு .