தவக்கால மூவேளைச் செபம்

விண்ணரசியே மனங்களிகூரும் - அல்லேலூயா
ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கப் பேறுபெற்றீர் - அல்லேலூயா
தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார் - அல்லேலூயா
எங்களுக்காக இறைவனை மன்றாடும் - அல்லேலூயா
கன்னி மரியே! அகமகிழ்ந்து பூரிப்படைவீர் - அல்லேலூயா
ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் - அல்லேலூயா
செபிப்போமாக

எல்லாம் வல்ல இறைவா! உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்பினால் உலகம் களிகூரத் திருவுளமானீரே. அவருடைய திருத்தாயாராகிய தூய கன்னி மரியாளின் துணையால் நாங்கள் என்றென்றும் நிலையான பேரின் வாழ்வைப் பெற அருள்புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய அதே இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் - ஆமென்.