மகா தயை
நிறைந்த இறைவனே! அளவற்ற அருளாளனே! துன்பக் கடலின் அதல பாதாளத்தில்
வீழ்ந்துகிடக்கும் மனுக்குலம் முழுவதும் இன்று உமது இரக்கத்தை
வேண்டிக் கூவி அழைக்கின்றது. ஓ! இறைவனே! இவ்வுலகின் கண்ணீர்க்
கணவாயிலிருந்து எழும் எம் மன்றாட்டைத் தள்ளிவிடாதேயும்.
ஓ! ஆண்டவரே! எம் அறிவுக்கும் அப்பாற்ப்பட்ட அருளாளனே! எமது
துன்பங்களை முற்றுமுழுதாக அறிந்தவரே! எம்முடைய பலத்தினால்
நாம் உம்மிடம் வரமுடியாதவர்கள் என்பதனை அறிந்தவரே உமது விருப்பத்தை
நாம் நம்பிக்கையுடன் எமது வாழ்நாள் முழவதும் எமது மரண வேளையிலும்
கடைப்பிடித்து வருவதற்கு முன்கூட்டியே எமக்கு அருளி உமது இரக்கத்தை
எம்மீது பெருகவிடும் என்று உம்மை இரந்து மன்றாடுகின்றோம்.
நீர் மட்டுமே அறிந்திருக்கும் உமது வருகையை உமது குழந்தைகளாகிய
நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து இருப்பதற்கு எமது மீட்பின்
எதிரிகளின் கணைகளிலிருந்து உமது இரக்கத்தின் அளவிடற்கரிய வல்லமை
எம்மைக் காப்பாறுவதாக. எம்மிடம் ஈனத்தனங்கள் இருந்த போதிலும்
இயேசு எமக்கு வாக்களித்திருந்த எல்லாவற்றையும் அடைவதற்கு நாம்
எதிர்பார்த்து இருக்கின்றோம்.
ஏனெனில் இயேசுவே! எமது நம்பிக்கை திறந்திருக்கும் ஒரு கதவின்
வழியாகச் செல்வதுபோல நாம் அவருடைய இரக்கமுள்ள இருதயத்தின்
வழியாக பரலோகம் செல்வோம்
முதல்.: நித்தியபிதாவே! எமது
பாவங்களுக்காகவும் உலகின் பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்யும்
படியாக....
அனைவ: உமது நேசக் குமாரனாகிய
எமது ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும்
ஆன்மாவையும் தெய்வீகத்தையும் உமக்கு ஒப்புக் கொடுக்கின்றோம்.
|