புனித பவுஸ்தீனாவின் மன்றாட்டினால்
வரங்களை அடைய நவநாட் செபம்


இயேசுவே! உமது அடியாளாகிய புனித பவுஸ்தீனாவை உமது எல்லையற்ற இரக்கத்தின் பக்தியால் நிரப்பினீரே! உமக்குத் திருவுளமானால் அவரது மன்றாட்டின் வழியாக நான் இறைஞ்சிக் கேட்கும் இவ்வரத்தை எனக்குத் தந்தருளும்.....

(இவ்வேளையில் மௌனமாக உங்களது தேவைகளைக் கேட்கவும்)


எனது பாவங்களினால் உமது இரக்கத்திற்கு நான் அருகதை அற்றவன்(வள்) ஆனேன். ஆனால் புனித பவுஸ்தீனாவின் தியாகத்தையும், தன்மறுப்பையும் பார்த்து அவரது மன்றாட்டின் வழியாக குழந்தைக்குரிய நம்பிக்கையோடு நான் உம்மிடம் கேட்கும் விண்ணப்பத்தை எனக்கு அருள்வீராக – ஆமென்.

(தொடர்ந்துவரும் எட்டு நாட்களும், ஒவ்வொரு நாளுக்கான நவநாட்களை, முதல் வெள்ளியில் ஆரம்பித்ததற்கு அமைவாக அந்நாட்களில் தியானிக்கலாம்)