மூவேளைச் செபம்

முத: ஆண்டவருடைய தூதர் அன்னை மரியாளுக்கு தூதுரைத்தார்
எல்: அவளும் தூய ஆவியினால் கருத்தரித்தாள் - அருள்நிறைந்த மரியே.....
முத: இதோ ஆண்டவருடைய அடிமை
எல்: உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் - அருள் நிறைந்த மரியே....
முத: வார்த்தை மனுவுருவானார்
எல்: நம்மிடையே குடி கொண்டார் - அருள் நிறைந்த மரியே......
முத: இயேசுக் கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி உள்ளவர்களாக இருக்கும் படியாக
எல்: இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக மன்றாடும்
செபிப்போமாக
இறைவா! உமது திருமகன் இயேசுக்கிறிஸ்து மனுவுருவானதை, உமது வானதூதர் வழியாக நாம் அறிந்திருக்கிறோம். அவருடைய பாடுகளினாலும், சிலுவையினாலும் நாங்கள் உயிர்ப்பின் மகிமையை அடையுமாறு, உமது அருளை எங்கள் உள்ளத்தில் பொழிய வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய அதே , யேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் - ஆமென்.