என் ஆண்டவளே! என் தாயாரே! இதோ என்னை முழுவதும் உமக்குப் பாத காணிக்கையாக ஒப்புக் கொடுக்கின்றேன். உமது பேரில் அடியேன் வைத்த பக்தியைக் காண்பிக்கத் தக்கதாக இன்று எனது கண், காதுகளையும், வாய், இருதயத்தையும், என்னை முழுவதும் உமக்குப் பாத காணிக்கையாக ஒப்புக் கொடுக்கின்றேன். என் நல்ல தாயாரே! நான் உமக்குச் சொந்தமாயிருக்கிறபடியால் என்னை உம்முடைய உடமையாகவும், சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றியருளும் - ஆமென்.
மரியாயே! என் நல்ல தாயாரே! இந்த நாளிலே (இந்த இரவில்) என்னைச் சடுதி மரணத்திலும், சாவான பாவத்திலும், சகல பொல்லாப்புக்களிலும் நின்று காத்துக்கொள்ளும் (3 அருள் நிறை..)
|