உணவுக்கு முன் செபம்

என் ஆண்டவராகிய இயேசுவே! என்னையும், உமது அளவற்ற கிருபையின் அருளால் இப்போது நான் உண்ணவிருக்கின்ற இந்த உணவையும், இந்த உணவைத் தயாரித்தவர்களையும் நிறைவாக ஆசீர்வதித்தருளும். இந்த வேளையில் தேவரீர் எனக்கருளிய கிருபைக்காக உமக்கு நன்றிகூறித் துதிக்கின்றேன். இரக்கமுள்ள தந்தையே! இன்று இந்த உலகின் ஒவ்வொரு பாகத்திலும் பஞ்சம், பசி, பட்டினியோடுவாடும் ஒவ்வொருவர் மீதும் உமது திருமுகக் கண்களைத் திருப்பியருளும். கல்லினுள் தேரைக்கும், புல்லினுள் பூவிற்கும் தேவரீர் உணவளிப்பது போன்று ஒருவேளை உணவிற்காக அல்லறும் மக்கள் மீதும் இரக்கமாக இருந்தருள வேண்டுமென்று மன்றாடுகின்றேன் - ஆமென்.