பாவங்கள்
(இரண்டு வகைப்படும்)

1-ஆதித்தாய் தகப்பன் இறை கட்டளையை மீறி செய்துகொண்ட குற்றத்தினால் நாம் பிறக்கும் போதே கடவுளின் பிள்ளைக்குரிய உரிமையை இழந்து 'சென்ம பாவம்' அல்லது 'ஆதிப்பாவம்' எனப்படும் நிலையில் பிறக்கின்றோம்.

2-நாம் புத்திவிபரம் அறிந்த பின்னர் 'கன்ம பாவம்' எனப்படும் பாவத்தை எமது முழு அறிவு, அவதானம், சம்மதம் என்பவற்றோடு செய்கின்றமையால் அருள் நிலையைப் போக்கி நித்திய அழிவிற்கு வழிவகுக்கும் 'குற்றம்' எனப்படும் 'சாவான பாவம்' செய்கின்றோம். இப்பாவம் எமக்குள் இறையன்பைக் குறைக்க வழிவகுக்கும். இறை அன்பைக் குறைக்கின்ற சிறிய பாவங்கள் 'அற்ப பாவம்' எனப்படும்.