பரம பிதாவின் மடியில் இருந்து பொங்கி வழிந்தோடுகின்ற இறையிரக்கமே
நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்
இறைவனுக்கு உரியதாய் இருக்கின்ற இறையிரக்கமே - நான்
உம்மில்
எம்மால் புரிந்துகொள்ளமுடியாமல் மறைபொருளாக விளங்குகின்ற
இறையிரக்கமே - நான் உம்மில் --
மூவொரு இறைவனின் மறைபொருளிலிருந்து பொங்கிவழிகின்ற
ஊற்றாகிய இறையிரக்கமே - நான் உம்மில் --
மனிதராலும் இறைத் தூதரதலும் ஆழங்காண முடியாத இறையிரக்கமே
-நான் உம்மில் --
வாழ்வும் மகிழ்வும்
வழிந்தோடும் ஊற்றாகிய இறையிரக்கமே - நான் உம்மில் --
வானகத்தை விட உன்னதமான இறை இரக்கமே - நான் உம்மில் --
அற்புதங்களுக்கும் அதிசயங்களுக்கும்
ஊற்றாக இருக்கின்ற இறையிரக்கமே - நான் உம்மில் --
இப்பூவுலகு முழவதையும் தம்மகத்தே கொண்டு பராமரித்து
வருகின்ற இறையிரக்கமே - நான் உம்மில் --
மனிதனாய் இப் பூவுலகில் பிறந்த இறை வார்த்தையான இறை இரக்கமே
- நான் உம்மில் --
இயேசுவின் திரு இருதயத்தின்
திறந்த காயத்த்லிருந்து வழிந்தோடுகின்ற இறையிரக்கமே - நான் உம்மில் --
எமக்காகவும் சிறப்பாகப் பாவிகளுக்காகவும்
இயேசுவின் திரு இருதயத்திலே குடிகொண்டுள்ள இறை இரக்கமே-
நான் உம்மில் --
தேவ நற்கருணையில் ஆழங்காணா
அளவில் குடிகொண்டுள்ள இறை இரக்கமே - நான் உம்மில் --
எமது தாயாம் திருச்சபையை ஏற்படுத்தி அதனை வழிநடத்தி
வருகின்ற இறையிரக்கமே - நான் உம்மில் --
நரகத்தின் கொடூரத் தீயிலிருந்து எம்மைப் பாதுகாக்கின்ற இறை
இரக்கமே - - நான் உம்மில் --
கடின மனமுள்ள பாவிகளின் மனமாற்றத்திற்குக் காரணமாயிருக்கின்ற
இறையிரக்கமே -நான் உம்மில் --
இறைத் தூதர்களின் வியப்புக்கும்
புனிதர்களின் புரிந்துணர்வுக்கும் மேலாக இருக்கின்ற இறை
இரக்கமே - நான் உம்மில் --
இறைவனின் மறை
உண்மைகள் யாவற்றிலும் ஆழங்காண முடியாததாக விளங்குகின்ற இறை
இரக்கமே- நான் உம்மில் --
எமது மகிழ்விற்கும்
நிறைவிற்கும் ஊற்றாக விளங்குகின்ற இறை இரக்கமே - நான் உம்மில் --
எம்மை ஒன்றுமில்லாமையில் இருந்து உருவாக்கக்
காரணமாக இருந்த இறையிரக்கமே - நான் உம்மில் --
வானகத் தந்தையானவர் இவ்வுலகை உருவாக்கும்போது அனைத்தையும'
ஆட்கொண்டிருந்த இறை இரக்கமே - நான் உம்மில் --
இறைத் தந்தையின் கை வன்மைகளின் மணி மகுடமாக விளங்குகின்ற
இறையிரக்கமே - நான் உம்மில் --
நாம் அனைவரும்
தோய்த்தெடுக்கப்படுகின்ற இறை இரக்கமே - நான் உம்மில் --
ஏக்கமடைந்த இதயங்களுக்கு இனிமையானஇளைப்பாற்றி
வழங்கும் இறையிரக்கமே - நான் உம்மில் --
நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஒரே நம்பிக்கையாய் இருந்து வருகின்ற
இறையிரக்கமே - நான் உம்மில் --
துன்பத்தின்
மத்தியில் அமைதியையும் இதயங்களுக்கு ஆறதலையும் வழங்குகின்ற
இறை இரக்கமே - நான் உம்மில் --
இறந்தவர்களுடைய
ஆன்மாக்களின் பரவசமும் இன்பமுமாய் விளங்குகின்ற இறையிரக்கமே
நான் உம்மில் --
எல்லா நம்பிக்கைகளையும்
விடமேலான நம்பிக்கையைத் தருகின்ற இறையிரக்கமே - நான் உம்மில் --
எக்காலத்துக்கும் தந்தையே! உமது இரக்கத்துக்கு
எல்லையேயில்லை. உமது இரக்கம் நிறைந்துள்ள களஞ்சியத்திலிருந்து
எவ்வளவுதான் எடுக்கப்பட்டாலும் அது குறைவுபடுவதே இல்லை.
எங்கள் மீது உமது பார்வையைத்திருப்பி உமது இரக்கத்தை நிறைவாகப்
பொழிந்தருளும். எமது துன்பவேளையில் நாங்கள் நம்பிக்கை இழந்து
மனம் சோர்ந்து போகாமல், அன்பும் இரக்கமுமாய் இருக்கின்ற
உமது திருவுளத்துக்கு எம்மை நம்பிக்கையோடு கையளித்திட உம்மை
மன்றாடுகின்றோம் - ஆமென்.