மகிமை நிறை தேவ இரகசியங்கள்

1வது – இறைமகன் இயேசு கல்லறையிலிருந்து உயிர்தெழுந்ததை தியானிப்போம்

ஆண்டவர் இயேசுவின் கல்லறைக்கு அதிகாலையில் சென்ற பெண்களைப் பார்த்து அங்கிருந்த வானதூதர் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள்.... அவர் இங்கே இல்லை. அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள் என மத்தேயு நற்செய்தி 28:5-6 கூறுகின்றது. தமது வாழ்விலே கஸ்ட துன்பங்கள் நீங்கப்பெற்றுஇ புதிய விடியலுக்காக அவதியுறும் ஒவ்வொருவரையும் குறிப்பாக எமது நாட்டு மக்களுக்காக இக்காரணிக்க வேளையில் மன்றாடுவோம்.

2வது – இறைமகன் இயேசு விண்ணகம் சென்றதனைத் தியானிப்போம்
இயேசு பெத்தானியா வரை சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்த போதே அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார் என லூக்கா நற்செய்தி 24:50-51ல் வாசிக்கின்றோம். உலகம் தரமுடியாத அமைதி வாழ்விற்காக அகதிகள் போன்று ஆதரவற்ற வாழ்க்கை வாழ்ந்து வரும் எமது நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அதிவிரைவில் விடுதலையும் சமாதானமும் அமைதியும் நிறைந்தவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இவ்வேளையில் மன்றாடுவோம்.

3வது – இறைவனின் தூய ஆவியானவரது வருகையை தியானிப்போம்
பெந்தகோஸ்தே நாளில் அன்னை மரியாள் மீதும், சீடர்கள் மீதும் அக்கினி நாக்கு வடிவில் இறைவனின் ஆவியானவர் இறங்கி வந்ததாகவும், அவர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசியதாகவும் நாம் திருத்தூதர் பணி 2:4ல் வாசிக்கின்றோம். அந்நிய நாடுகளில், அந்நிய கலாச்சார சூழல்களில் வாழும் எமது பிள்ளைகள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினதும், அன்னை மரியாளதும் பாதுகாவலில் வழிநடத்தப்பட வேண்டுமென இக்காரணிக்க வேளையில் மன்றாடுவோம்.

4வது – மரி அன்னை விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்டதனை தியானிப்போம்
வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது. பெண் ஒருவர் காணப்பட்டார். அவர் கதிரவணை ஆடையாக அணிந்திருந்தார். நிலா அவருடைய காலடியில் இருந்தது. அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடி இருந்தார் என திருவெளிப்பாடு 12:1ல் வாசிக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் நல் மரணம் அடையவும், எமக்கு நல்ல மரண அடக்கம் கிடைக்கவும், இறுதி தீர்ப்பு நாளில் நாம் வெண்ணாடை அணிந்தவர்களாக, இறைமகன் இயேசுவின் தரிசனம் பெறும் பாக்கியம் பெற்று உத்தானமடைய வரமருள வேண்டுமென்று மன்றாடுவோம்.

5வது– மரி அன்னை விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்டதை தியானிப்போம்
வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.... வலியோரை அரியணையின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார் என தூய அன்னை மரியா இறைவனைப் புகழ்ந்ததாக லூக்கா 1:49-50 வலசனங்களில் நாம் காணுகின்றோம். எமக்கு மரணத்தின் பின்னர் நித்திய மகிமையில் நாம் பிரவேசிக்கவும், அனுதினமும் பரிசுத்தர் பரிசுத்தர் என