தூய ஆவியின் துணையை நோக்கிச் செபம்

இறைவனின் தூய ஆவியே! தேவரீர் எழுந்தருளி வாரும். இறைமக்களின் உள்ளங்களை உமது ஒளியால் நிரப்பியருளும். அவற்றில் உமது அன்புத் தீயை மூட்டியருளும். எல்லாம் வல்ல ஆண்டவரே! உமது தூய ஆவியை எங்களிடத்தில் அனுப்பியருளும். அப்போது எங்களது இருதயங்களைப் புதுப்பித்தருளுவீர்.

 

செபிப்போமாக

இறைவா! உமது மக்களது உள்ளங்களைத் தூய ஆவியின் ஒளியால் தெளிவு படுத்தினீரே. அத்தூய ஆவியால் நாங்கள் சரியானவற்றை உணரவும். அவருடைய ஆற்றலால் மகிழ்வு பெறவும் அருள்புரிவீராக. இவற்றை எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் - ஆமென்.