உணவுக்குப் பின் செபம்

எல்லாம் வல்ல இறைவா! தேவரீர் எனக்கருளிய இந்த அரிய உணவிற்காகவும், சகலவிதமான நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமது பிள்ளைகளின் பசி போக்க வானிலிருந்து மன்னாவைப் பொழிந்தவரே! இந்தவேளையிலும் பசி பட்டினியோடு துன்புறுவோர் மீது இரக்கமாக இருந்தருள தேவரீரை இறைஞ்சி மன்றாடுகிறேன். நீரே என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்பவர். நீர் வல்லவர். நீர் நல்லவர். உமது மகத்தான கிருபையின் நன்மையில் நான் என்றும் நிலைத்திருக்க எனக்கு அருள்புரியும் - ஆமென்..