மகிழ்ச்சி நிறை தேவ இரகசியங்கள்

1 வது - மரி அன்னைக்கு மங்கள வார்த்தை சொன்னதைத் தியானிப்போம்.

'இதோ உமது அடிமை' என இறை சித்தத்தினை தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட தேவ அன்னையின் ஆசி, மகிழ்ச்சி, அமைதி, நம்பிக்கை எம்மிடையே உருவாகிட இக்காரணிக்க வேளையில் மன்றாடுவோம்.

2 வது – மரி அன்னை புனித எலிசபெத்தை சந்தித்ததை தியானிப்போம்
'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக' எனக்கூறப்படும் (எண்6:22-27) இவ்வாறான ஆசி எமது குடும்பங்களுக்கும், மற்றவர்களுக்கும், நாம் செபிக்கக் கடமைப்பட்டவர்களுக்கும் கிடைத்திட இக் காரணிக்க வேளையில் மன்றாடுவோம்.

3வது – பெத்லகேமில் பாலகன் இயேசு பிறந்ததை தியானிப்போம்

'எல்லாம்வல்லவரே உனக்கு ஆசி வழங்குவார்' எனக் கூறப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் (தொடக்க நூல்49:25) பிறக்கின்ற ஒவ்வொரு பாலகருக்கு மட்டுமல்ல, தாய்மாரின் கருவறையிலேயே கல்லறையாக்கப்படுகின்ற பாலகர்களுக்கும் கிடைத்திட வேண்டுமென இக் காரணிக்க வேளையில் பாலகன் இயேசுவிடம்; மன்றாடுவோம்.

4வது – குழந்தை இயேசுவைக் காணிக்கையாக கொடுத்ததை தியானிப்போம்
அந்நிய நாட்டில் அந்நிய கலாச்சாலத்தில் மட்டுமல்ல, எமது தாய் நாட்டிலும் வாழுகின்ற ஒவ்வொரு குழந்தையும் அன்னை மரியாளினதும், இறைமகன் இயேசுவினதும் பாதுகாப்பிலும், அரவணைப்பிலும் வழிநடத்தப்பட வேண்டுமென எமது குழந்தைகளை குழந்தை இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் இக் காரணிக்க வேளையில்; காணிக்கையாக ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.

5வது – காணாமற்போன இயேசுவை கோவிலிலே கண்டடைந்ததை தியானிப்போம்
'என் தந்தையில் அலுவல்களில் நான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? ' என தன்னைத் தேடிய பெற்றோரிடம் சிறுவன் இயேசு கூறிய வார்த்தைகளைத் தியானிப்போம். நாமும் இவ்வுலக மாயையில் அகப்பட்டு இறைவனிடமிருந்து பிரிந்துள்ள எமது ஆன்மீக வாழ்வை மீண்டும் தேடிக் கண்டடைய வரமருள வேண்டுமென்ற இக்காரணிக்க வேளையில் மன்றாடுவோம்.