மாலைச் செபம்

என்னை உருவாக்கிய தேவ பிதாவே! அடியேனை ஆசீர்வதித்தருளும். எனக்காக பாடுபட்டு மரணமடைந்த இயேசுக்கிறிஸ்து நாதரே! அடியேனைக் காத்தருளும். இந்த நாள் முழுவதும் தேவரீர் என்னோடு கூட வழி நடந்து என்னைக் காத்தருளிய கிருபைக்காக நன்றி கூறுகின்றேன். பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா! இந்த இராத்திரியிலேயும் எப்போதும் உமது பிரகாசத்தால் என்னை நடத்திப் பரிசுத்தப்படுத்தியருளும் - ஆமென்.


இயேசுவே, மரியாயே, சூசையப்பரே என் இருதயத்தையும், என் ஆன்மாவையும் உங்கள் கைகளில் ஒப்புக் கொடுக்கிறேன்.
இயேசுவே, மரியாயே, சூசையப்பரே என் கடைசி மரண அவஸ்தை வேளையில் எனக்கு உதவி செய்தருளுங்கள்.
இயேசுவே மரியாயே சூசையப்பரே என் ஆத்துமம் உங்களோடே சமாதான ஐக்கியமாய் என் உடலை விட்டுப் பிரியக்கடவது – ஆமென்.